எம்மை பற்றி
எமது திரிசாரணர் இயக்கமானது மனிதநேயத்துடனான ஒரு சேவையை மக்களுக்கு புரியுமுகமாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக சாரணர் பருவத்தைக்கடந்து அடுத்து அவர்கள் வாழ்கையை எவ்விதமாக மனித நல்லொழுக்கத்துடன், மற்றவர்களுக்கு சேவை செய்யுமுகமாக சாரணர்களை 18 வயதிற்கு பின்பும் வழிநடத்துவதற்காகவே இத்திரிசாரணர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இன்று திருக்கோணமலையில் சாரணியத்தில் 18 வயதைக்கடந்த அனைத்து சாரணர்களும் இதில் இணைந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி தொடர்ந்து சேவையில் ஈடுபடுவதனூடாக பேடன் பவல் விருதினையும் பெற்றுக்கொள்ளலாம்.
