Archive for November, 2008
சாரணர் விளையாட்டு முகாம்
இலங்கை சாரர் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் ஏற்பாட்டில் சாரணர் விளையாட்டு முகாம் ஒன்று சனிக்கிழமை நடைபெறுகின்றது. கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் காலை 8.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இதில் 12 சாரணர் குழக்களைச் சேர்ந்த 340 சாரணர்கள் கலந்து கொள்கின்றனர். இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சி.பட்டுவங்கல இதில் பிரதம அதிதிhகக் கலந்து கொள்கின்றார். இதனைத் தொடரந்து குருளைச்சாரணர் வெளிக்கள தினமும் கொண்டாடப்படுகின்றது. இதில் திருக்கோணமலை கிளையின் முன்னாள் நிறைவேற்றுக் குழுவின் தலைவர் நாயகம் சிற்றம்பலம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார்.
