நூல் வெளியீடு
Random Photos
  • விருந்தினர்

    20191 விருந்தினர்கள்

  • Archive for August, 2008

    திருக்கோணமலையில் சாரணர் அவத்தை 2

     திருக்கோணமலையில் கடந்த 8,9,10 ஆகிய திகதிகளில் சாரணதலைவர்களுக்கான சாரண அவத்தை பயிற்ச்சிநெறி சிறப்பாக நடைபெற்றது. இப்பயிற்ச்சிப் பாசறையை மாவட்ட சாரணர் சங்கம் ஒழுங்கு செய்தது. இப் பயிற்ச்சி நெறியின் போது ஏற்கனவே சாரணஅவத்தை 1 ஐ பூர்த்திசெய்திருந்த அனைவரும் பங்கேற்றினர். இந்நிகழ்வானது லிங்கநகர் கோணலிங்க மகாவித்தியாலத்திலே நடைபெற்றது. இதில் மொத்தமாக 25 சாரணர்கள் பங்குபற்றினர். மேலும் இப்பயிற்ச்சிப் பாசறையில் மாவட்ட ஆணையாளர் திரு.ராஜாரஞ்சன், மாவட்ட பயிற்சி திரு.ராஜ்குமார், இவர்களுடன் திரு.பத்மசீலன், திரு.சசிகுமார், திரு.உதயகுமார், திரு.தேவசகாயம் போன்றவர்களும் சாரணதலைவர்களுக்கு பயிற்சி அளித்து இப்பாசறையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். படிமங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

    திருமலைக்கு 2 தருசின்னம்

    சாரணத் தலைவருக்கான அதிஉயர் விருதான (சர்வதேச விருது) தருசின்ன விருதை, எமது மாவட்டசாரண தலைவர்களாகிய திரு.த.சதீசன், திரு.ரா.சத்தியராஜ் இருவரும் பெற்றறு எம் மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளனர். திரு.த.சதீசன் அவர்கள் 1998 ஆம் ஆண்டு சாரணர் தலைவராக பயிற்ச்சிபெற்று, பின்னர் சாரண அவத்தை 2ஐ 2000ஆம் ஆண்டும், சாரண அவத்தை 4 ஐ 2007ம் ஆண்டளவில் பூர்த்திசெய்து தற்போது இத் தருசின்த்தைப் பெற்றுள்ளார். திரு.ரா.சத்தியராஜ் அவர்கள் 1997 ஆம் ஆண்டு சாரணர் தலைவராக பயிற்ச்சிபெற்று, பின்னர் சாரண அவத்தை 2ஐ 2000ஆம் ஆண்டும், சாரண அவத்தை 4 ஐ 2007ம் ஆண்டளவில் பூர்த்திசெய்து தற்போது இத் தருசின்த்தைப் பெற்றுள்ளார். (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).