Archive for March, 2008
திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் தீத்தோற்சவ நிகழ்வில்..
திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் தீத்தோற்சவ நிகழ்வில் திருக்கோணமலை உயிர்காக்கும் படையணியை சேர்ந்த K.சிவானந்தன் (IP) [Public relation officer in suprndent of police Trincomalee division office], ரனதுங்க (Sajan) அவர்களின் ஒத்துழைப்புடன், எமது திரிசாரணர்களின் தலைமையில் மாவட்ட சாரணசங்க சாரணர்களும், திரிசாரணர்களும் இணைந்து கடமையில் ஈடுபட்டனர். இந்நிகழ்வை மாவட்ட ஆணையாளர் திரு.ராஜரஞ்சன் அவர்கள் ஒழுங்கமைத்து வழிநடத்தினார்
திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் தேர்உற்சவம்
பத்திரகாளி அம்பாள் வருடாந்த தேர்உற்சவ நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சாரணர்களுடன் இம்பீசாதிரிசாரணகளும் மிகச் சிறப்பாக கடமையில் ஈடுபட்டனர்.
புனித சூசையப்பர் கல்லூரியின் 141 ஆண்டு நிகழ்வு
திருக்கோணமலை மாவட்ட புனித சூசையப்பர் கல்லூரியின் 141வது ஆண்டு நிறைவினை 19-03-2008 அன்று கொண்டாடியது. இந் நிகழ்வில் திரு.ஸ்மைல் (LLB) “Oldest Old Boy“ ஆக பாடசாலை அதிபர் அருட்தந்தை ஜீவனதாஸ் பெர்னாண்டோ அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். படிமங்கள்
திருக்கோணமலையில் அவத்தை 1 ற்கான பயிற்சிகள் ஆரம்பம்
இன்று திருக்கோணமலையில் சாரணர் அவத்தை 1ற்கான பயிற்சிநெறி, இன்று காலை 8.00மணிக்கு கொடியேற்றும் வைபவத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில் இலங்கைசாரணர் சங்கத்தின் வடக்குமாகாண தலைமைக்காரியாலய ஆணையார் திரு.போஜன் அவர்களும், திருமதி.வரதசீலன் அவர்களும், சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு இப்பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தனர். மாவட்ட ஆணையாளர் திரு.ராஜாரஞ்சன் தலைமையில் இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.
