Archive for February, 2008
திருக்கோணமலையில் சாரணர் அவத்தை 1ற்கான பயிற்சி.
திருக்கோணமலை மாவட்டத்தில் சாரணர் அவத்தை 1 ற்கான பயிற்சிப்பாசறை எதிர்வரும் வாரங்களில் நடைபெறஇருக்கின்றது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து மாவட்ட சாரணசங்கத்திற்கு கையளித்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.விண்ணப்பப்படிவம்
இன்று திருக்கோணமலையில் தேன்மாரி….
இன்றுதிருக்கோணமலையில் தேன்மாரி இசைநிகழ்ச்சி இசைஆசான் இமானுவல் தலைமையில், மாலை 5.00மணி தொடக்கம் 8.00 மணிவரை தி-உவர்மலை விவேகானந்தா கல்லூரில் நடைபெற்றது. இதன் சிறப்பு விருந்தி திரு.பத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டார்கள். (படிமங்கள்)
இணையத்தள அறிமுகம்
இன்று இம்பீசா திரிசாரணர் குழுவின் இணையத்தளம், பேடன் பிரபுவின் ஞாபகார்த்தமான இன்று புதியதோர் சரி்த்திரம் படைக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் இணையத்தளத்தில் பல்வேறு சாரண அம்சங்களும், கலையம்சங்களும் புதிதாக சேர்க்கப்படவுள்ளன. இவ் இணையத் தளமானது சமூகத்தையும், சாரணர்களையும் பல்வேறு பரிமாணங்கயளுடன் சிந்திக்வும், செயற்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டதொன்றாகும்.
இன்று பேடன் பவுல் தினம்
இன்று பேடன் பவுல் தினத்தை முன்னிட்டு எமது திருக்கோணமலை மாவட்டத்தில் சாரணச் செயற்பாடுகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. எமது மாவட்ட சாரணசங்கத்தால், ஒழுங்குபடுத்தப்பட்ட படி ஒவ்வொரு பாடசாலையிலும் பேடன் பவுல் தினமானது பாடசாலை ரீதியாக இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
