நூல் வெளியீடு
Random Photos
  • விருந்தினர்

    20023 விருந்தினர்கள்

  • ஸ்ரீ பத்திரகாளிஅம்பாள் தேவஸ்தான நிகழ்வில்…….

    கடந்த வாரம் திருக்கோணமலையில் நடைபெற்ற ஸ்ரீ பத்திரகாளிஅம்பாள் தேவஸ்தான நிகழ்வில் எமது மாவட்ட சாரணர்களுடன் இணைந்து எமது திரிசாரணர் குழுவும் தமது கடமையை சரிவரச் செய்தனர். இந்நிகழ்வில் சாரணர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும், மக்களுக்கு அவசியமானதாகவும் காணப்பட்டது. படங்கள் இணைப்பு

    கல்விசார் ஊக்குவிப்பு செயற்திட்டம் - 2010

    கடந்த 07ம் திகதி பங்குனி மாதம் 2010ல் திருக்கோணமலை மாவட்ட இம்பீசா திரிசாரணர் குழுவினர் திருக்கோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மூதூர் நிலாவெளி மற்றும் ஆலங்கேணி முதலிய பிரதேசங்களில் 2010ல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கலைப்பிரிவு மாணவர்களுக்கான கல்லிசார் ஊக்குவிப்பு நடவடிக்கையாக பரீட்சை நடாத்தப்பட்டது. இப்பரீட்சையானது மூதூரில் அல்-ஹிலால் முஸ்லிம் வித்தியாலத்திலும் கிளிவெட்டி தமிழ் மகா வித்தியாலத்திலும் ஆலங்கேணி தமிழ் மகா வித்தியாலத்திலும் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலத்திலும் மற்றும் சாம்பல்தீவு  தமிழ் மகா வித்தியாலத்திலும் தமிழ் பரீட்சை நடைபெற்றது. இணைப்பு படங்கள் Read the rest of this entry »

    தருசின்னம் பெற்ற சாரணர்களுக்கான ஒன்றுகூடல் (Gill wel Re union)

    இலங்கை சாரணர் சங்கத்தால் தரு சின்னம் பெற்ற சாரணர் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் (Gill wel Re union) இவ்வருடம் திருக்கோணமலையில் இன்று நடைபெற்றது. இதில் சுமார் 250 அகில இலங்கைச் சாரணர் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்று 07.11.2009 மாலை 4.30 மணிக்கு கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இவ் ஒன்றுகூடல் நடைபெற்றது. இந் நிகழ்வில் 2 பேடன் பவுல் விருதுகளும், 4 தருசின்னம் சூட்டும் நிகழ்வும் இனிதே நடந்தேறியது.

    எமது இம்பீசா திரிசாரணர்களில் திரு.ரா.புஸ்பராகவன், திரு.டொ.பிரசாந் ஆகியோருக்கு பேடன் பவுல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் கலாச்சார நிகழ்வுகளும் இனிதே நடந்தேறியது.

    பின்னர் இம்பீசாவின் அணுசரனையில் இராபோசன நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் எமது மாவட்ட மூத்த சாரணர்களான திரு.வி.தங்கராஜா ஐயா அவர்கட்கும், திரு.ஆரோக்கியநாதன் ஐயா அவர்களுக்கும், திரு.ஆர்.எம்.ஜீ.தங்கராஜா ஐயா அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவம் செலுத்தப்பட்டது. அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவேறியது.

    படங்களை பார்க்க :-


    Pictures

    இலங்கை சாரணர் தலைவர்களுக்கான ஒன்றுகூடல்

    இலங்கையில் உள்ள தருசின்னம் பெற்ற சாரணதலைவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் திருக்கோணமலையில் நடைபெறவுள்ளது. இதனை திருக்கோணமலை மாவட்ட சாரணசங்கம் ஒழுங்கமைத்து நடாத்தவுள்ளது. இந் நிகழ்வுக்கு எமது திரிசாரண குழு நிதி ரீதியான அணுசரணை வழங்கி தமது பங்களிப்பினை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    gill.jpg